• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லக்கிம்பூர் விவசாயிகள் கொலை குறித்து கண்டனம்- பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து மேனகா காந்தி, வருண் காந்தி நீக்கம்

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை குறித்து கண்டனம்- பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து மேனகா காந்தி, வருண் காந்தி நீக்கம்

மேனகா காந்தி, வருண் காந்தி

மேனகா காந்தி, வருண் காந்தி

பா.ஜ.க தேசிய செயற்குழுவிலிருந்து மேனகா காந்தி, வருண் காந்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களின் வருகையை கண்டித்து, விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

    விவசாயிகள் மீது கார் ஏறும் வீடியோ வெளியானது. அந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் இருந்தது. இந்த விவகாரம் குறித்த பா.ஜ.க எம்.பி வருண் காந்தி ட்விட்டர் பதிவில், ‘‘லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார்கள் ஏறி செல்வதைக் காட்டும் வீடியோ யாருடைய உள்ளத்தையும் உலுக்கும். இந்த வீடியோவை போலீசார் கவனத்தில் எடுத்து காரின் உரிமையாளர்கள், காரில் அமர்ந்திருப்பவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்" என்று கூறினார்.

    பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று 80 பேர் கொண்ட தேசிய செயற்குழு நிர்வாகிகளை அறிவித்தார், பிரதமர் மோடி முதல் பல மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் மற்றும் எல்.கே.அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், மேனகா காந்தி, வருண் காந்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சவுத்ரி பீரேந்தர் சிங் ஆகியோர் புதிய நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெறவில்லை. லக்கிம்பூர் சம்பவம் குறித்து விமர்சனம் செய்திருந்த நிலையில் வருண் காந்திக்கு தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது பா.ஜ.கவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: