ஹோம் /நியூஸ் /இந்தியா /

நீங்க கராத்தே வீரரா..! இந்தியா வந்த மெலனியா ட்ரம்பைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

நீங்க கராத்தே வீரரா..! இந்தியா வந்த மெலனியா ட்ரம்பைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்

ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப்

ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மெலனியா ட்ரம்ப் அணிந்திருக்கும் உடை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ட்ரம்பை, பிரதமர் மோடி சென்று வரவேற்றார். ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடன் வந்துள்ளார். ட்ரம்ப் கோட் சூட் உடை அணிந்திருந்த நிலையில், மெலனியா ட்ரம்ப், முழுவதும் வெள்ளை நிறத்தில் தற்காப்பு கலையான கராத்தேவுக்கான உடை போன்ற வடிவத்தில் உடையை அணிந்துள்ளார்.

மேலும், அவரது இடுப்பில் பச்சை நிற துணியை கட்டியிருந்தார். அவரது உடை நெட்டிசன்களின் பார்வையை ஈர்த்துள்ளார். அவரது உடை குறித்து நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். எல்லோரும் ’மெலினியா கராத்தே நிகழ்வுக்கு வந்துள்ளார்’, ’மெலனியா இந்திய ஆண்கள் குறித்து தெரிந்திருப்பார். அதனால், தற்காப்புக்கான தயாரிப்புடன் வந்துள்ளார்’ என்று கலாய்த்துவருகின்றனர்.

Also see:

 

First published:

Tags: Trump India Visit