Home /News /national /

மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் - கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!

மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் - கர்நாடக முதலமைச்சர் கண்டனம்!

Mekedatu: தமிழகத்தின் அரசியல் முடிவு எதுவாக இருந்தாலும், மேகதாது திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழக அரசின் செயல்பாடு சட்டவிரோதமானது எனவும், பிற மாநில உரிமைகளில் தலையிடுவது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகவில் தோன்றும் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் மேகதாது திட்டத்தை, நடைமுறைக்கு கொண்டு வருவது தங்கள் முடிவு எனவும் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீர் போக, மீதமுள்ள நீரின் மீது கர்நாடக அரசுக்கு முழு உரிமை உள்ளதாக கூறியுள்ளார்.

    Also read... தமிழகத்தில் 4ஆம் அலை வருமா வராதா என்று தெரியவில்லை ஆனால்... - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    தமிழகத்தின் அரசியல் முடிவு எதுவாக இருந்தாலும், மேகதாது திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Karnataka, Mekedatu dam

    அடுத்த செய்தி