மேகதாது விவகாரம்... எச்சரிக்கை விடுத்த வாட்டாள் நாகராஜ்!

மேகதாது அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால் தமிழ் படங்களை திரையிட விடமாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: January 12, 2019, 10:05 PM IST
மேகதாது விவகாரம்... எச்சரிக்கை விடுத்த வாட்டாள் நாகராஜ்!
வாட்டாள் நாகராஜ்
Web Desk | news18
Updated: January 12, 2019, 10:05 PM IST
மேகதாது அணைக்கான பணிகளை கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் காவிரிப் பிரச்னை ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் சட்டப் போராட்டம் நடத்தியே நீதியை பெற வேண்டியிருக்கிறது. தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்த முயற்சிக்கு மத்திய அரசும் ஆதரவு கொடுத்து வருவதை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் மேகதாது அணைக்கான பணிகளை கர்நாடக அரசு உடனடியாக  தொடங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கன்னட சாலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அவரது கட்சியினர் மட்டுமல்லாது பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.மேகதாது அணைக்கான பணிகளை கர்நாடக அரசு துரிதப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த போலீசார் வாட்டாள் நாகராஜை கைது செய்தனர்.

மேகதாது அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால் தமிழ் படங்களை திரையிட விடமாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...