மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது: முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம்!

மேகதாது அணை தொடர்பாக ஆலோசனை மேற்கோள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளளார்.

  • Share this:
    மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை பாதிக்காது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.

    இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை கட்டுவது தமிழகத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கது என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், மேகதாது அணை தொடர்பாக ஆலோசனை மேற்கோள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

    முன்னதாக, மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஒருதலைப்பட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

    இத்திட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு கடந்த 2015ல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அத்தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

    சமீபத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போதும் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்விதத்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
    Published by:Esakki Raja
    First published: