ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேகதாது அணை... சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தை பரிசீலனையில் நீக்கிய மத்திய அரசு

மேகதாது அணை... சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பத்தை பரிசீலனையில் நீக்கிய மத்திய அரசு

மேகதாது

மேகதாது

மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து நீக்கிய மத்திய அரசு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாநில மக்களின் குடிநீர் தேவைக்கான அணை கட்டுவதாக கர்நாடக அரசு வாதிடுகிறது. உச்ச நீதிமன்ற விதிப்படி காவிரி பாயும் மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை உட்பட எந்தவித கட்டுமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசு கூறுகிறது.

  தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத்தி இருந்தார். அதில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.

  Also Read: மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் தலைமையிலான தமிழக குழு மத்திய அமைச்சருடன் இன்று சந்திப்பு

  இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சுழல் துறை நீக்கியுள்ளது. அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை நீர்வளத்துறை அமைச்சகமே இறுதி செய்யும் என்றும் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் இறுதி செய்தால் மட்டுமே சுற்றுச்சுழல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cauvery dispute, Cauvery River, Karnataka, Mekedatu, Mekedatu dam