Home /News /national /

மேகேதாட்டுவில் 2022 இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கும்... சர்ச்சையைக் கிளம்பும் கர்நாடக முதல்வர்

மேகேதாட்டுவில் 2022 இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கும்... சர்ச்சையைக் கிளம்பும் கர்நாடக முதல்வர்

மேகேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் யாத்திரை நடத்தியது. அதன் தாக்கத்தை சமாளிக்க அணை கட்டும் அறிவிப்பை பாஜக வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேகேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் யாத்திரை நடத்தியது. அதன் தாக்கத்தை சமாளிக்க அணை கட்டும் அறிவிப்பை பாஜக வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேகேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் யாத்திரை நடத்தியது. அதன் தாக்கத்தை சமாளிக்க அணை கட்டும் அறிவிப்பை பாஜக வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    மேகேதாட்டுவில் இந்தாண்டு இறுதிக்குள் அணை கட்டும் பணிகள் தொடங்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நியூஸ்18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

    காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அமைத்து 67.16 டி.எம்.சி நீரை சேமிக்கவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தவும், 400 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட நீர் மின் நிலையம் அமைக்கவும் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், எதையும் பொருட்படுத்தாது அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடகா துரிதப்படுத்தி வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நியூஸ் 18-க்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பேட்டியில், ‘மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பான விபரங்களை காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்கு அளித்துள்ளோம். அவர்கள் அணை கட்டுவதற்கான ஒப்புதலை விரைவில் அளித்து விடுவார்கள். சுற்றுச் சூழல் தொடர்பான ஒப்புதலை பெறுவதற்கு சிறிது காலம் ஆகும். இதன் அடிப்படையில் இந்தாண்டு இறுதிக்குள் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான பணிகள் தொடங்கி விடும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க - ஒரே மேடையில் மம்தா பானர்ஜி - பிரசாந்த் கிஷோர்... வதந்திகளுக்கு திரிணாமூல் காங்கிரஸ் முற்றுப்புள்ளி

    மேகேதாட்டு அணை கட்டுவதற்கான எந்த அனுமதியும் கர்நாடக அரசால் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது. காவிரியின் கடைமடை பாசனப் பகுதியான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

    இதையும் படிங்க - ''தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று நாங்கள்தான்'' : ஆம் ஆத்மி தலைவர்கள் உற்சாகம்

    இந்நிலையில் மேகேதாட்டு விவகாரத்தை கர்நாடக அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. கர்நாடகாவில் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால், அம்மாநிலத்தின் காவிரி பாசன மாவட்டங்களில் வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகள் மேகேதாட்டு அணை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.

    ஒருபுறம் மேகேதாட்டு அணையை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி யாத்திரை நடத்திய நிலையில், அதன் தாக்கத்தை சமாளிப்பதற்காக அணை கட்டும் அறிவிப்பை பாஜக வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Mekedatu

    அடுத்த செய்தி