Home /News /national /

மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடக தீர்மானம்

கர்நாடக தீர்மானம்

தமிழக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீர்மானம் கொண்டு வந்தார் . அப்போது சட்டவிரோதமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்கவும் ...
    மேகதாது அணை கட்டும் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியது. எனினும், கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பது தமிழக அரசின் வாதம். எப்படியாவது மேகதாது அணையை கட்டி தீர்வது என்பதில் கர்நாடகாவும் உறுதியாக உள்ளது.

    இது தொடர்பாக மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகா விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் சுமூகமாக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 21ம் தேதி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதையும் படிங்க: சாக்கடையில் குதித்து சுத்தம் செய்த கவுன்சிலர்.. பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய ஆதரவாளர்கள்..வைரல் வீடியோ!


    தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கர்நாடக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசின் செயல்பாடு சட்டவிரோதமானது எனவும், பிற மாநில உரிமைகளில் தலையிடுவது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகவில் தோன்றும் காவிரி நதியின் குறுக்கே அணை கட்டும் மேகதாது திட்டத்தை, நடைமுறைக்கு கொண்டு வருவது தங்கள் முடிவு எனவும் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீர் போக, மீதமுள்ள நீரின் மீது கர்நாடக அரசுக்கு முழு உரிமை உள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் படிக்க: இந்தியாவில் முதன் முதலாக ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டரை வாங்கிய கேரள தொழிலதிபர்!


    இந்நிலையில், தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டும் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து கர்நாடக சட்டமன்றத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீர்மானம் கொண்டு வந்தார் . அப்போது சட்டவிரோதமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் குற்றஞ்சாட்டினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Karnataka, Mekedatu dam

    அடுத்த செய்தி