ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழகம், கர்நாடகம் இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாதுவில் அணை: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

தமிழகம், கர்நாடகம் இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாதுவில் அணை: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

மேகதாது

மேகதாது

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேற்று எடியுரப்பா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

தமிழகம், கர்நாடகம் இடையே உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாது அணை குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கர்நாடகத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு கடந்த ஜூன் 20-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சக்கத்திடம் விண்ணப்பித்திருந்தது. தமிழக அரசின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விண்ணப்பத்தில், கர்நாடகாவில் வறட்சியை சமாளிக்கவும், தமிழகத்திற்கு உரிய நீரை வழங்குவதற்காகவும் இந்த அணை அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜுலை 19-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில், மேகதாது அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்வதற்கான அனுமதியை கர்நாடக அரசிற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணார் மதிப்பீட்டுக் குழு வழங்க மறுத்துள்ளது. மேலும், இந்த திட்டம் தொடர்பாக கூடுதல் தகவல்களை சமர்ப்பிக்கும்படி கர்நாடக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதன்படி, அணை கட்டுவதற்கான மாற்று இடங்கள் குறித்து பரிசீலிக்காமல், ஒரே இடத்தில் இரு வேறு உயரத்தில் அணைகள் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படுள்ளதாக சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு குற்றம்சாட்டியுள்ளது. இந்த அணை கட்டுவதற்காக 4,996 ஹெக்டேர் பரப்பளவில் காவிரி வன உயிர் சரணாலயம் மற்றும் காப்புக்காடு பகுதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதற்கு பதிலாக வேறு நிலங்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலங்கள் குறித்து தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ள சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு, இந்த திட்டத்திற்கு ஆய்வு எல்லைகளை வழங்கக் கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இரு மாநிலங்களிடையே சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மேகதாது அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், அணை கட்டுவதற்கு தமிழக அரசின் உரிமை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... சுஷ்மா சுவராஜின் அரிய புகைப்படங்கள்!


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Karnataka, Mekedatu dam