ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரின் தாய் குல்ஷன் நசீரின் விண்ணப்பத்தையும் பாஸ் ஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி புதிய பாஸ்போர்ட் கேட்டு மெகபூபா முப்தி ஸ்ரீநகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், போலீஸார் விசாரணை அறிக்கையில், மெகபூபா முப்தி தேசத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படலாம், தேசபாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம், ஆதலால், மெகபூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைக்க முடியாது என்று தெரிவித்தனர். இதன் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும் மறுத்துவிட்டார்.
போலீஸார் விசாரணை அறிக்கையில், மெகபூபா முப்தி தேசத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படலாம், தேசபாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம், ஆதலால், மெகபூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைக்க முடியாது என்று தெரிவித்தனர். இதன் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், மெகபூபா முப்தியின் தாயார் குல்ஷன் நசீர் தாக்கல் செய்திருந்த பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் போலீஸாரின் சிஐடி பிரிவு, மெகபூபா முப்தியின் தாயார் குல்ஷன் நசீருக்கு உரிய நற்சான்றிதழ்களை வழங்காததால், அவரின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீநகர் பாஸ்போர்ட் அதிகார மெகபூபா முப்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் " 70 வயதுக்கு மேலான எனது தாய் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதி, அவரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர், அவர் பாஸ்போர்ட்பெறும் தகுதியற்றவர். மத்திய அரசுக்கு நான் கட்டுப்பட்டு நடக்காததால், என்னை துன்புறுத்தி, தண்டிக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக தன் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டது குறித்து மெகபூபா முப்தி கூறுகையில், “சிஐடி அறிக்கையை தொடர்ந்து எனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது, ஆகஸ்ட் 2019 முதல் இந்த அளவு இயல்பு வாழ்க்கை லட்சணம்தான் காஷ்மீரில் சாதிக்கப்பட்டுள்ளது. ஒரு முன்னாள் முதல்வருக்கு பாஸ்போர்ட் அளிப்பது இவ்வளவு பெரிய தேசப்பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறப்படுகிறது.” என்று காட்டமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jammu and Kashmir, Mehbooba Mufti