காஷ்மீரிகள், கூண்டில் அடைக்கப்பட்ட விலங்குகளைப் போல உள்ளோம் என்று முஃப்தி முகமதுவின் மகள் இல்திஜா ஜாவேத் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதனால், காஷ்மீரில் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அம்மாநிலத்தின் முக்கியத் தலைவர்களான ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், மெஹ்பூபா மகள் இல்திஜ் ஜாவேத் ஒரு வாய்ஸ் நோட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதமும் எழுதியுள்ளார். அதில்,‘இன்று நாட்டின் பிற பகுதிகள் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், காஷ்மீரிகள் விலங்குகளைப் போல கூண்டுக்குள் வைக்கப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
நான் மீண்டும் பேசினால் எனக்கு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்பட்டேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் கற்பனை செய்ய முடியாத அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு குடிமகனுக்கு பேச உரிமை இல்லை. சிரமமான உண்மையை கூறியதற்காக நான் ஒரு போர்க் குற்றவாளியைப் போல நடத்தப்படுகிறேன் என்பது ஒரு சோகமான முரண்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.