சட்டப் பிரிவு 35-ஏவில் கையை வைப்பது வெடிகுண்டில் கை வைப்பது போன்றது! மெஹ்பூபா எச்சரிக்கை

கடந்த 25-ம் தேதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு இன்னும் 10,000 வீரர்களைப் பாதுகாப்புக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. திடீரென அளவுக்கு அதிகமான வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

news18
Updated: July 28, 2019, 8:40 PM IST
சட்டப் பிரிவு 35-ஏவில் கையை வைப்பது வெடிகுண்டில் கை வைப்பது போன்றது! மெஹ்பூபா எச்சரிக்கை
மெகபூபா முஃப்தி
news18
Updated: July 28, 2019, 8:40 PM IST
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புச் சட்டம் 35-ஏவில் திருத்தம் கொண்டுவருவது என்பது வெடிகுண்டை கையில் எடுப்பதுபோன்றது என்று மெஹ்பூபா முஃப்தி கடுமையாக எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால் எப்போதும் மாநிலம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்தநிலையில், சமீபத்தில் அமர்நாத் யாத்திரை காரணமாக அங்கு மேலும் 20,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோப்புப் படம்இந்நிலையில் கடந்த 25-ம் தேதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு இன்னும் 10,000 வீரர்களைப் பாதுகாப்புக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. திடீரென அளவுக்கு அதிகமான வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 35-ஏவை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், பிரச்னை ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகத்தான் அதிகளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் உலாவருகின்றன.

இதுகுறித்து பேசிய காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி, ‘சட்டப் பிரிவு 35-ஏவில் சட்டத்திருத்தம் கொண்டுவருவது என்பது வெடிகுண்டை கையில் எடுப்பது போன்றது. 35-ஏ வைத் தொட்டால் கையில் மட்டும் சாம்பல் நிறம் படியாது. உடல் முழுவதும் சாம்பல் படியும்.

இதுதொடர்பாக, உள்ளுக்குள் அச்சம் உள்ளது. அவர்கள்,மெதுவாக காஷ்மீரிகளை வலுவிலக்கச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அரசியல்ரீதியாக, பொருளாதார ரீதியாக வலுவிலக்கச் செய்ய முயற்சி செய்கிறார்கள். எங்கள் கட்சியைத் தவிர அவர்களுக்கு எதிராக யாரும் நிற்பதில்லை’ என்று தெரிவித்தார்.

Loading...

Also see:

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...