முகப்பு /செய்தி /இந்தியா / ஆப்கானிஸ்தான் நிலையை காஷ்மீருடன் ஒப்பிட்டு மத்திய அரசை எச்சரித்த மெஹ்பூபா முப்தி

ஆப்கானிஸ்தான் நிலையை காஷ்மீருடன் ஒப்பிட்டு மத்திய அரசை எச்சரித்த மெஹ்பூபா முப்தி

mehbooba mufti

mehbooba mufti

உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் போதே உங்கள் வழிமுறையை மாற்றப்பாருங்கள். எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் செயல்பாட்டோடு ஒப்பிட்டு பேசிய காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை எச்சரிக்கும் விதமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்கு பின்னர் அரசுப் படைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாலிபான்கள் வெறும் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி உலக அரங்கை அதிரச் செய்திருக்கின்றனர். அங்கு போர் நிறைவுக்கு வந்த போதிலும் பதற்றம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக உலகம் முழுதுமே தாலிபான்கள் குறித்த பேச்சாகத்தான் இருந்து வருகிறது.

Also read: தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தல்?

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி தாலிபான்கள் குறித்து பேசி மத்திய அரசை எச்சரித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி முறைகேடு விவகாரத்தில் மெஹ்பூபா முப்தியின் தாயார் குல்ஷன் நசீர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இது குறித்து செய்தியாளர்களிடையே மெஹ்பூபா முப்தி இன்று பேசுகையில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானிலிருந்து வலிமைமிக்க அமெரிக்கா மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வெளியேறியது எப்படி என பாருங்கள்.

Also read : தாலிபான்களின் கொட்டத்தை அடக்கிய எதிர்ப்புப் படைகள் – 3 மாவட்டங்கள் மீண்டும் மீட்பு!

உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் போதே உங்கள் வழிமுறையை மாற்றப்பாருங்கள். எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். வாஜ்பாய் எப்படி அமைதி பேச்சு நடத்தினார் என யோசித்துப்பாருங்கள். பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கி, காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் அதை திருப்பிக் கொடுங்கள். எங்களிடம் இருந்து எதை களவாடினீர்களோ அதை மீண்டும் திருப்பியளியுங்கள்.” இவ்வாறு பேசினார்.

முன்னதாக அவர் பேசும்போது, நாட்டின் தன்னாட்சி நிறுவனங்கள் தாலிபான்மயமாகிவிட்டதாக கூறினார். அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மீடியாக்களும் கூட தாலிபான்மயமாகிவிட்டதாக கூறினார்.

Also read :  தாலிபான்களுக்கு ஆதரவு: அஷ்ரப் கனிக்கு அதிர்ச்சி தந்த அவரது சகோதரர்!

முன்னதாக, தாலிபான்களை இந்திய சுதந்திர வீரர்களுடன் ஒப்பிட்டு சமாஜ்வாதி கட்சி எம்.பி ரஹ்மான் பர்க் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. “பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்து வைத்திருந்தனர், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் சுதந்திரத்திற்காக போராடினர். தற்போது தாலிபான்கள் அவர்கள் நாட்டை சுதந்திரம் பெற வைத்திருக்கின்றனர். அவர்களே ஆள வேண்டும் என கருதுகின்றனர். ரஷ்யா, அமெரிக்கா போன்ற வலிமைமிக்க எந்த நாடும் தங்கள் நாட்டில் குடியேறவிடாமல் தாலிபான்கள் தடுத்திருக்கின்றனர்.” இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ரஹ்மான் பர்க்-ற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.

First published:

Tags: Article 370, Jammu and Kashmir, Mehbooba Mufti, Taliban