மெஹ்பூபா தீவிரவாதி என ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியிருக்கும்! பா.ஜ.கவைக் கண்டிக்கும் மெஹ்பூபா

தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நான் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் கோபம் எப்படி வெளிப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மெஹ்பூபாதீவிரவாதி என்ற ஹேஷ்டேக்கை ஊடகங்கள் வெறித்தனமாக ட்ரென்ட் செய்திருப்பார்கள்.

Web Desk | news18
Updated: April 18, 2019, 4:42 PM IST
மெஹ்பூபா தீவிரவாதி என ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியிருக்கும்! பா.ஜ.கவைக் கண்டிக்கும் மெஹ்பூபா
மெஹ்பூபா முஃப்தி, ஓமர் அப்துல்லா
Web Desk | news18
Updated: April 18, 2019, 4:42 PM IST
தீவிரவாதச் செயலில் குற்றம் சாட்டப்பட்டவரை, வேட்பாளராக நான் தேர்தலில் நிறுத்தியிருந்தால் ஊடகங்கள் என்னை வெறித்தனமாக கையாண்டிருக்கும் என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி பதிவிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க சார்பில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா தாகுர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி ட்விட்டர் பதிவில், ‘தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை நான் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியிருந்தால் கோபம் எப்படி வெளிப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மெஹ்பூபா தீவிரவாதி என்ற ஹேஷ்டேக்கை ஊடகங்கள் வெறித்தனமாக ட்ரென்ட் செய்திருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை காவித் தீவிரவாத விவகாரம் வெளியே வந்தால், தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்பார்கள். மற்ற நேரங்களில் இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள். குற்றவாளி என்று நிருபிக்கப்படாதவரை அனைவரும் நிரபராதிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஓமர் அப்துல்லா, ‘பா.ஜ.கவினர் உங்கள் கூட்டணியில்தானே இருந்தனர். அவர்கள், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் இதே பாதையில்தான் இருந்தனர். ஆனால், அவர்களுடைய பாவங்களை ஜூன் 2018-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பார்க்கிறீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Loading...
Also see:

First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...