முகப்பு /செய்தி /இந்தியா / நாகாலாந்து, மேகாலயா தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

நாகாலாந்து, மேகாலயா தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

நாகாலாந்து மேகாலயா தேர்தல்

நாகாலாந்து மேகாலயா தேர்தல்

காங்கிரஸ், பாஜக, தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagaland, India

நாகாலாந்தில் 81.94 சதவிகித வாக்குகளும் மேகாலயாவில் 74.32 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோகியோங்க் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 59 தொகுதிகளுக்கு திங்கள் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

காங்கிரஸ், பாஜக, தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 7 மணி முதல் மாலை நான்கு மணிவரை இளைஞர்கள், பெண்கள் எனப் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக துரா பகுதியில், காலையிலேயே வாக்களித்த 55 வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் பரிசுகளை வழங்கினர். மேகாலயாவில் 74.32 சதவீதம் பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோல், நாகாலாந்திலும் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இளைஞர்கள், பெண்கள் எனப் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகாலாந்தில் 81.94 சதவீதம் பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.

First published:

Tags: Election, Meghalaya, Nagaland