• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பதவி பறிபோனால் போகட்டும்... மத்திய அரசை கடுமையாக எதிர்த்து பேசிய மேகாலயா ஆளுநர்..

பதவி பறிபோனால் போகட்டும்... மத்திய அரசை கடுமையாக எதிர்த்து பேசிய மேகாலயா ஆளுநர்..

Governor Satyapal malik

Governor Satyapal malik

மத்திய அரசை எதிர்த்துப் பேசுவதால் என் பதவி பறிபோகுமோ என்ற அச்சம் எனக்கில்லை என்றார் ஆளுநர்

  • Share this:
மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், விவசாயிகள் போராட்ட விஷயத்தில் சீக்கியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதையும் நினைவுபடுத்தி மத்திய அரசை எச்சரிக்கும் விதமாக அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்து வருபவர் சத்யபால் மாலிக், இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்தவர். ஆளுநரான சத்யபால் மாலிக், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமீபகாலமாக பேசிவருகிறார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஜாட் சமூகத்தினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் சத்யபால் மாலிக் பேசுகையில், விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் போக்கை வெகுவாக கண்டித்தார்.

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர்களும், ஜாட் சமூகத்தினருமே பெரும்பான்மையாக கலந்து கொண்டிருக்கும் நிலையில், ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வெறும் கையோடு ஊர் திரும்பமாட்டார்கள்.’ என சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

Also read:  கடந்த ஆண்டு வணிகர்கள் அதிகளவில் தற்கொலை – NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

அவர் கூறுகையில், “நாடு இப்படியொரு பெரும் போராட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை, இந்த போராட்டத்தில் 600 பேர் உயிர் நீத்துள்ளனர். ஒரு நாயின் மரணத்துக்கு கூட இரங்கல் தெரிவிக்கும் டெல்லி தலைவர்களிடமிருந்து இதற்கு ஒரு இரங்கலும் வரவில்லை.

இந்திரா காந்தி படுகொலை:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை நினைவுபடுத்தி பேசிய சத்யபால் மாலிக், மத்திய அரசு சீக்கியர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்றார். மேலும் பொற்கோவிலில் நடைபெற்ற ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையினால் சீக்கியர்களின் கோவத்துக்கு இரையாகி இந்திரா காந்தி கொல்லப்பட்டதாகவும், ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஏ.எஸ்.வைத்தியா புனேவில் கொல்லப்பட்டதையும், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவரான ஜெனரல் மைக்கேல் டுவைர் லண்டனில் கொல்லப்பட்டதையும் சத்யபால் மாலிக் ஒப்பிட்டு பேசினார்.

Also read:  வாழ்க்கைமுறை நோய்களை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சையளிக்க கேரள அரசு சூப்பர் திட்டம்!

மத்திய அரசில், ராணுவத்தில் உள்ளவர்கள் கூட விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் ஒன்றிரண்டு பேர் திமிராக இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் மத்திய அரசை எதிர்த்துப் பேசுவதால் என் பதவி பறிபோகுமோ என்ற அச்சம் எனக்கில்லை. அவர்கள் தான் என்னை நியமித்தார்கள், அவர்களுக்கு விருப்பமில்லை பதவி விலக வேண்டும் என கட்டளையிட்டால் அடுத்த நொடியே பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேசினார்.

ஆளுநரின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: