மேகலயா மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

மேகலயா மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

கான்ரட் சங்மா

மேகலயா மாநில முதல்வர் கான்ரட் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பொதுமக்களைக் கடந்து முன்களப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், திரைத்துறை பிரபலங்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இந்தியாவில் இதுவரையில், 97 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், கொரோனா பாதிப்பால் 1,42,186 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தி நிலையில், மேகலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நான் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது . கரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருந்ததால் நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.

  கடந்த 5 நாட்களில் என்னுடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த அனைவரையும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து கண்காணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தேவைப்பட்டால் பரிசோதனை செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் மேகலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.எல்.ஹெக் மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஸ்நியாவ்பாலங் தர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: