முகப்பு /செய்தி /இந்தியா / மேகாலயாவில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லை... தேசிய மக்கள் கட்சி தொடர்ந்து முன்னிலை

மேகாலயாவில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லை... தேசிய மக்கள் கட்சி தொடர்ந்து முன்னிலை

மேகாலயா தேர்தல்

மேகாலயா தேர்தல்

Meghalaya Assembly Election Results 2023 : மேகாலாயாவில் தொடர்ந்து தேசிய மக்கள் கட்சி முன்னிலை வகித்துவருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Meghalaya, India

மேகாலாயாவில் பெரும்பான்மையான வெற்றிக்கு 59 தொகுதிகளில் 31 தொகுதிகள் வெற்றி பெறவேண்டும் நிலையில் இதுவரை எந்த கட்சியில் பெரும்பான்மை தொகுதிகளை பெறவில்லை. இந்த நிலையில் 26 தொகுதிகளுடன் தேசிய மக்கள் கட்சி வெற்றி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மேகாலயாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 18ல் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 21 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்பதால், பாஜக மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் நடப்பு சட்டமன்ற தேர்தலில், தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் என அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. வாக்குப்பதிவு நடைபெற்ற 59 தொகுதிகளில், 26 இடங்களில் தேசிய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Also Read : கடும் போட்டிக்கு மத்தியில் திரிபுராவில் ஆட்சியை தக்க வைத்த பாஜக.. பிரதமருக்கு முதல்வர் புகழாரம்!

திரிணாமுல் காங்கிரஸ் 6 இடங்களிலும், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா வீட்டின் முன்பு கூடிய தொண்டர்கள், நடனமாடி வெற்றியை கொண்டாடினர்.

First published:

Tags: Election Result, Meghalaya