Home /News /national /

சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.. ஆனால் இப்போது அரசு பேருந்தை ஓட்டுகிறேன்..! - அசத்தும் சாதனை பெண்மணி

சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.. ஆனால் இப்போது அரசு பேருந்தை ஓட்டுகிறேன்..! - அசத்தும் சாதனை பெண்மணி

பெண் ஓட்டுநர் ஷர்மிளா

பெண் ஓட்டுநர் ஷர்மிளா

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஷர்மிளா ஓட்டுநராக பயிற்சி எடுக்கவும் பணிபுரியவும் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    டெல்லியில் சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத பெண் ஒருவர் சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு தற்போது அரசு பேருந்து ஓட்டுநராக உருவெடுத்து அசத்தியுள்ளார்.

    டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் அரசு போக்குவரத்துக் கழகமான DTCஇல் (Delhi Transport Corporation) பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தும் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது.இந்த திட்டத்தில் பல்வேறு தளங்களை சேர்ந்த பெண்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து பயிற்சி அளிக்கும் செயல்பாட்டை டெல்லி அரசு மேற்கொண்டுவருகிறது.

    அதன்படி, டெல்லியில் வசிக்கும் ஷர்மிளா என்ற பெண்மணி அரசின் ஊக்குவிப்பு காரணமாக அரசு போக்குவரத்து ஓட்டுநராக பரிணமித்துள்ளார். தனக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும் வரை தான் சைக்கிள் கூட ஓட்டியதில்லை எனக் கூறும் ஷர்மிளா, தான் பேருந்து ஓட்டுநராக சாத்தியப்படுத்திய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி என்றுள்ளார்.


    இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஷர்மிளா இந்த பயிற்சி எடுக்கவும் பின்னர் ஓட்டுநராக பணிபுரியவும் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்துள்ளனர். ஆரம்பத்தில் ஒரு பெண் ஓட்டுநரான என்னை சக ஊழியர்களும் பயணிகளும் ஆச்சரியத்துடன் வித்தியாசமாக பார்ப்பார்கள் என்று கூறும் ஷர்மிளா டெல்லி அரசின் இந்த முயற்சியால் தன்னை போல் பல பெண் ஓட்டுநர்கள் உருவாகுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நாள் தவறாமல் மாணவர்களுடன் வகுப்பை கவனிக்கும் குரங்கு..வைரலாகும் ருசிகர வீடியோ

    டெல்லி போக்குவரத்து கழகம் 11 பெண் ஓட்டுநர்களை முதல் கட்டமாக பணியமர்த்தியுள்ள நிலையில், 200 பெண் ஓட்டுநர்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது பயணித்து வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Delhi, Woman

    அடுத்த செய்தி