இமாச்சல் மாநிலத்தில் அரசு பேருந்தை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்...!

இமாச்சல் மாநிலத்தில் அரசு பேருந்தை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர்...!

அரசு பேருந்தை இயக்கிய முதல் பெண்

சிம்லா-சண்டிகர் பாதையில் புதன்கிழமை பேருந்தை ஓட்டிச் சென்றார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகெங்கிலும் உள்ள பெண்கள் துணிச்சலாக சமூகத்தில் முன்னேறி வருகின்றனர். மெட்ரோ ரயில், ஆட்டோ, பேருந்து, விமானம் இயக்குவது என அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சீமா தாக்கூர் என்ற பெண் இமாச்சல் சாலை போக்குவரத்துக் கழகத்தில் (எச்.ஆர்.டி.சி) பேருந்து ஓட்டுநராக இணைந்துள்ளார். இவர் சிம்லா-சண்டிகர் பாதையில் புதன்கிழமை பேருந்தை ஓட்டிச் சென்றார். இதன் மூலம் இமாச்சல் மாநிலத்தில் அரசு பேருந்தை இயக்கிய முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையை சீமா பெற்றுள்ளார்.

சீமா தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மிகவும் தைரியத்துடன் ஓட்டுனர் வேலையை தேர்ந்தெடுத்துள்ளார். இதனால் இமாச்சலில் மொத்தம் 8,813 பேரை ஓட்டுனர்களாக வேலை செய்யும் போக்குவரத்து கழகத்தில் உள்ள 3,100 அரசு பேருந்துகளில் ஒன்றை ஓட்டிய ஒரே பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அனைவருக்கும் ஒருவித அச்சத்தை தரும் நிலையில், சீமாவும் துணிச்சலாக களம் இறங்கியுள்ளார். அனைத்து இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் இடையே , சீமா தினமும் வெளியே சென்று வருகிறார் சிம்லாவிலிருந்து - சண்டிகர் செல்லும் மாநிலங்களுக்கு இடையேயான பாதையில் தினமும் பயணிகளை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இந்த செய்தியை ANI செய்தி நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், இமாச்சல் மாநிலத்தின் முதன் பெண் பெருந்து ஓட்டுனர் என குறிப்பிட்டு சீமா பேருந்து ஓட்டிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளனர்.

மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தி குறித்து பேசிய சீமா, “நான் இமாச்சல பிரதேச மாநிலத்தின் முதல் பெண் பஸ் டிரைவர். நான் மே 5, 2016 அன்று ஓட்டுநராக பணியில் சேர்ந்தேன். கோவிட் -19 தொற்று பரவல் காலத்திற்கும் இடையில் நான் சேவை செய்கிறேன். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறை பெண்களும் இப்போது சேவை செய்கிறார்கள். இதேபோன்ற கடமையை நானும் நிறைவேற்றுவதாக உணர்கிறேன், அரசுக்கு சேவை செய்ததில் மகிழ்ச்சி, எப்போதும் எனது பணியை நினைத்து பெருமை கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

Also read... சாப்பிடுவதற்காக ஸ்லேட் பென்சிலை விற்பனை செய்யும் அமேசான்... இப்படியெல்லாமா விப்பாங்க!

மேலும் பஸ் டிரைவராக மக்களுக்கு சேவை செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது கடமைக்குப் பிறகு நான் வீட்டிற்குள் நுழையும்போது எனக்கு ஒருவிதமான பயம் இருக்கிறது, ஆனால் நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறோம். கொரோனா வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன் என சீமா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் அனைத்து பஸ் சேவைகளையும் மீண்டும் தொடங்க மாநில அரசு அனுமதி அளித்ததையடுத்து சீமா ஒரு உள்ளூர் பேருந்தை பயணிகளுடன் இயக்கியதாக கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: