முகப்பு /செய்தி /இந்தியா / கணவரின் நினைவாக 73 ஆயிரம் மரங்களை வளர்த்த ஜேனெட் யக்னேஸ்வரன்!

கணவரின் நினைவாக 73 ஆயிரம் மரங்களை வளர்த்த ஜேனெட் யக்னேஸ்வரன்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஜேனெட் செய்த பணி, பெங்களூரு நகரிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே அப்பகுதியினர் கூறுகின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பெங்களூருவைச் சேர்ந்த ஜேனெட் யக்னேஸ்வரன் என்ற பெண் தனது கணவரின் மறைவுக்குப் பின்னர் அவரது நினைவாக பெங்களூருவில் இதுவரையில் 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தும் வருகிறார்.

ஜேனெட்டின் கணவர் கடந்த 2005-ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். அதன் பிறகு அவரது நினைவாக 2006-ம் ஆண்டு பெங்களூருவைச் சுற்றி மரங்கள் நடத்தொடங்கினார். இதுவரையில் 73 மரங்களை நட்டு வளர்த்துள்ளார். ஜேனெட் செய்த பணி, பெங்களூரு நகரிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே அப்பகுதியினர் கூறுகின்றனர்.

மரம் நட்டு வளர்க்க நினைப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார். அடுத்ததாக கர்நாடகாவின் வேறு சில பகுதிகளிலும், கூர் பகுதியில் 1,000 மரக்கன்றுகள், தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: தென்னை மரம் ஏற ’பைக்’ கண்டுபிடித்த விவசாயி- கொண்டாடும் நெட்டிசன்கள்!

First published:

Tags: Bangaluru, Tree plantation