கள்ளக்காதலனுடன் கூலிப்படை ஏவி, மாமனாரை தீர்த்துக் கட்டிய மருமகள்!

மாதிரி படம்

உத்தரப் பிரதேசத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு, கள்ளக்காதல் உதவியுடன் மாமனாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

 • Share this:
  உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்திற்குட்பட்ட  தட்டினா கிராமத்தைச் சேர்ந்தவர் சாலினி. இவரது கணவர் சஞ்சிவ் கடந்த 2018ம் ஆண்டு  உயிரிழந்தார்.  இதையடுத்து சாலினிக்கும் அவரது மாமனார் சத்பாலுக்கு இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.   தான் உயிரோடு இருக்கும் வரை சொத்தை தரமாட்டேன் என சத்பால் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து அவரையே கொலை செய்ய சாலினி முடிவு செய்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இதையும் படிங்க: உடல் உறவு வைக்காமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதும் கற்பழிப்புதான் - உயர்நீதிமன்றம் உத்தரவு!


  அதன்படி, கூலிப்படையினர் உதவியுடன் சத்பாலை அவர் கொலை செய்துள்ளார் .சாலினிக்கு விபின் என்ற காதலர் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.  சஞ்சிவ்வின் நண்பரான விபின், அவரது மறைவுக்கு பின் அடிக்கடி சஞ்சிவ் வீட்டுக்கு வந்துள்ளார். இதில், சாலினி மற்றும்  விபின் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. சத்பாலை வேவு பார்த்து கூலிப்படையினரையும் ஏற்பாடு செய்தது விபின்தான் என கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: பெண் மீது ஏறி உட்கார்ந்து தாக்குதல்? வைரல் வீடியோவுக்கு போலீஸ் மறுப்பு!


  இந்த கொலை தொடர்பாக , இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சாலினியின் தந்தை , அவரது சகோதரர், காதலர் உட்பட  5 பேரும் இதில் அடங்குவர். கொலையில் தொடர்புடைய  இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் மீரட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Murugesh M
  First published: