ஒரே மோதிரத்தில் 12,638 வைரக் கற்கள்: கின்னஸ் சாதனை படைத்த உத்தரப் பிரதேச நகைக் கடை

ஒரே மோதிரத்தில் 12,638 வைரக் கற்கள்: கின்னஸ் சாதனை படைத்த உத்தரப் பிரதேச நகைக் கடை

கின்னஸ் சாதனை படைத்த வைர மோதிரம்

ஒரே மோதிரத்தில் 12,638 வைரக்கற்களைப் பதித்து மீரட்டிலுள்ள நகைக்கடை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

 • Share this:
  உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டிலுள்ளது ரெனானி ஜூவல்லர்ஸ். அந்த நகைக் கடையின் நிர்வாக இயக்குநர் ஹர்ஷித் பன்சால். இந்த நகைக்கடையில் 12,638 வைரக் கற்களைப் பதித்து வைர மோதிரத்தை உருவாக்கியுள்ளனர். அதிக வைரக் கற்களைப் பதித்து உருவாக்கப்பட்டுள்ள மோதிரத்துக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சாமந்திப் பூ(MARIGOLD) வடிவில் இந்த வைர மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வைர மோதிரம் உருவாக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் அதற்கான உழைப்பு குறித்தும் ஹர்ஷித் பன்சால் இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘இந்தச் சாதனையை படைக்க மூன்று வருடங்களாக திட்டமிட்டிருந்தோம். இந்த வைர மோதிரத்தின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் மீரட்டில் நடைபெற்றிருந்தாலும், அதனுடைய உற்பத்தி சூரத்தில்தான் நடைபெற்றது. எங்களுடைய 28 கைவினை கலைஞர்கள் சூரத்திலுள்ள வைர குடோனில்(hub) தங்கி இதனைச் செய்தார்கள். இந்தச் சாதனையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். குறிப்பாக என்னுடைய தந்தை அனில் பன்சால் மிகவும் மிகவும் சந்தோசமாக உள்ளார்.

  வரலாற்று ரீதியாக நகை விற்பனையில் முக்கியத்துவம் கொண்ட சிறிய நகரமான மீரட்டுக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம். இந்த மோதிரத்தின் எடை 165.45 கிராம் ஆகும். 38.08 கேரட் வைரம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் பாரம்பரியத்தில் சாமந்திப் பூ என்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரக் கூடியது. அதனால், சாமந்திப் பூ வடிவத்தில் மோதிரத்தை வடிவமைத்தோம்.

  இந்த மோதிரத்துக்கு சர்வதேச ரத்தினவியல் ஆய்வகம்(International gemological laboratory)சான்றிதழ் அளித்துள்ளது’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: