எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் கலந்தாய்வுக்கான பதிவு நேற்று தொடங்குவதாக இருந்தது, ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பதிவு பாதிக்கப்பட்து. எனவே, இன்று முதல் கலந்தாய்வுக்கான பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் மதிப்பெண் அடிப்படையில் இணையதளம் மூலம் வரும் 2-ஆம் தேதி வரை கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம்.
தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யும் பணி நவம்பர் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற்று, நவம்பர் 5-ஆம் தேதி விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட 15 சதவீதம் இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடக்கிறது.
மீதமுள்ள 85 சதவிகித இடங்களுக்கு அந்தந்த மாநிலங்கள் கலந்தாய்வு நடத்தி மருத்துவ இடங்களை நிரப்பும். தமிழகத்தில் 547 எம்.பி.பி.எஸ் இடங்களும் 15 பி.டி.எஸ் இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
www.mcc.nic.in என்ற இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில், நவம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம். இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு நவம்பர் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.