தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்தில் பதவியை ராஜிநாமா செய்த நீதிபதி

news18
Updated: April 16, 2018, 8:32 PM IST
தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்தில் பதவியை ராஜிநாமா செய்த நீதிபதி
news18
Updated: April 16, 2018, 8:32 PM IST
ஹைதராபாத்திலுள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேரை விடுவிப்பதாக இன்று காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்திர ரெட்டி, மாலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஐதராபாத், சார்மினார் பகுதியிலுள்ள மெக்கா மசூதியில் கடந்த 2007, மே 18-ஆம் தேதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர், 58 பேர் படுகாயமடைந்தனர். மேலும், மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) சேர்ந்தவர்கள் சுவாமி அசீமானந்தா, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு ஐதராபாத்திலுள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 3 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர். இந்நிலையில் எஞ்சியுள்ள சுவாமி அசிமானந்தா, தேவேந்தர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத் பாய் மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று நீதிபதி ரவீந்திர ரெட்டி தெரிவித்தார்.

ராஜிநாமா: இந்நிலையில், ரவீந்திர ரெட்டி நீதிபதி பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று மாலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ரவீந்திர ரெட்டி ஐதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்