இந்தியாவில் எல்லோரையும் சைவமாக மாற்ற ஆசைப்படுகிறீர்களா? - உச்சநீதிமன்றம்

“ இந்த நாட்டில் எல்லோரும் சைவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் எல்லோரையும் சைவமாக மாற்ற ஆசைப்படுகிறீர்களா? - உச்சநீதிமன்றம்
கோப்புப் படம் (Photo Courtesy: Reuters).
  • News18
  • Last Updated: October 13, 2018, 10:12 AM IST
  • Share this:
இந்தியாவிலிருந்து இறைச்சிகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள்,  “ இந்த நாட்டில் எல்லோரும் சைவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ” என கேள்வி எழுப்பினர்.

இறைச்சி ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மடான் பி லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது இறைச்சி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் முடியாது அதனை விளம்ரப்படுத்துவும் முடியாது என தெரிவித்தனர். அத்துடன் "நாட்டில் உள்ள அனைவரையும் சைவத்திற்கு மாற மனுதாரர்கள் ஆசைப்படுகிறீர்களா" என்று கேட்ட நீதிபதிகள் "அதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியாது” என்றும் தெரிவித்தனர்.

மேலும் “ஆர்கானிக் ஃபாம்மை” நம் நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என்று மற்றொரு வழக்கு தனியார் நிறுவனத்தால் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் இறுதியில் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும் அரசாங்கம்தான் இதனை முடிவு செய்ய வேண்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை நினைவு கூர்ந்த நீதிபதிகள், தற்போதைய வழக்கிலும் அரசாங்கமே முடிவெடுக்கும் என்று கூறினர்.


அதற்கு பதிலளித்த மனுதாரர்கள், இந்த இறைச்சி ஏற்றுமதி விவகாரத்தை ஏற்கனவே நீதிமன்றம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் இதுவரை இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், " எல்லாவற்றையும் அரசாங்கத்திற்கு தெரிவிப்பது எங்கள் வேலை அல்ல," எனக்கூறி இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ALSO READ... ”ஓர் பாலின ஈர்ப்பு குற்றமில்லை”: சட்டம் ஏற்றுக்கொண்டது.. சமூகம்?

ALSO WATCH...

First published: October 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்