'சாய்வாலா' என்ற இந்தி வார்த்தைக்கு டீக்கடைக்காரர் என்று அர்த்தம். மோடி பிரதமர் ஆன பின்பு இந்த வார்த்தை கூடுதலாக பிரபலமானது. காரணம் பிரதமர் மோடி தனது இளமை காலத்தில் டீ விற்றுக்கொண்டிருந்தாக கூற அதை சிலர் எதிர்தரப்பில் ஏளனம் செய்தனர். ஆனால் அந்த ஏளனத்தையே தனக்கு சாதகமான ஆயுதமாக மாற்றிய மோடி, ஒரு எளிய மகன் கடின உழைப்பால் முன்னேறியுள்ளேன் என பிரான்டிங் செய்துகொண்டார். அப்போது தொடங்கி இந்த சாய்வாலா என்ற வார்த்தை பிரான்டிங் வார்த்தையாகவே மாறிவிட்டது.
இந்த சாய்வாலா என்ற வார்த்தை குஜராத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் ஒருவருக்கும் பயன்பட்டு தற்போது நாட்டின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்துள்ளார். ஆம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் பிரபுல் பிளோரே. இவருக்கு ஐஐஎம் அகமதாபத்தில் எம்பிஏ பட்டம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் 2017இல் தனது பட்டப்படிப்பை பாதிலேயே விட்டு விட்டு தொழில் செய்யத் தொடங்கினார். 'எம்பிஏ சாய்வாலா'(MBA Chai Wala) என்ற பெயரில் டீக்கடை தொழிலை தொடங்கி தற்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கடைகளை திறந்து ஒரு சாம்ராஜியத்தையே உருவாக்கியுள்ளார்.
View this post on Instagram
இவரின் நெட் வொர்த் 24 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தற்போது ரூ.90 லட்சம் மதிப்பிலான Mercedes GLE 300D சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் சேர்ந்த புதிய காரில் பிரபுல் போஸ் கொடுக்கும் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு வேகமாக வைரலாகியுள்ளது. இந்த பதிவை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Gujarat, Mercedes benz