தன்னை எல்.கே.ஜி. மாணவி என விமர்சித்த பாஜக தலைவருக்கு நாட்டின் இளம்வயது மேயரான ஆர்யா ராஜேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
கேரளாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் மேயராகவும் பதவியேற்றார். தனது 21வது வயதில்மேயராக பதவியேற்றதன் மூலம் நாட்டின் இளம் வயது மேயர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
இந்நிலையில்,பாஜக கவுன்சிலரான கரமனா அஜித் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் , லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. மேயர் நாற்காலியில் அமர்ந்து விளையாடும் ஏ.கே.ஜி மையத்தின் எல்.கே.ஜி குழந்தைகளால் அழிக்கப்படுவதற்கான பொருட்கள் அல்ல அவைகள்’ என்று ஆர்யா ராஜேந்திரன் குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்தார். மாநகராட்சி அலுவலகம் என்பது குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் அல்ல என்றும் ஆர்யாவின் வயதை விமர்சித்து அவர் பதிவிட்டிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கு மாநகராட்சி கூட்டத்தின்போது பதிலளித்த ஆர்யா ராஜேந்திரன், ‘ கடந்த ஆறு மாதங்களாக நீங்கள் பல்வேறு விமர்சனங்களைமுன்வைத்துள்ளீர்கள். நீங்கள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் நியாயமான விமர்சனங்களை வைக்கலாம். நீங்கள் அனைவரும் என்னை தனிப்பட்ட முறையில் வயது, அனுபவம் தொடர்பாக விமர்சித்துள்ளீர்கள்.இந்த வயதில் நான் மேயராகிவிட்டால், அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும், அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.
மேலும், “ உங்களை முகநூலில் பின் தொடர்பவர்களின் அவதூறு பின்னோட்டங்களை நான் உங்களிடம் காண்பித்தால், இந்த மேயரும் உங்கள் வீட்டில் உள்ள சகோதரி,தாய் போன்றவர் என்பதை நீங்கள் உணர்வீர்கள். பெண்களை விமர்சிப்பவர்கள்யாராக இருந்தாலும் அது தவறுதான்” என்று கூறியுள்ளார். ஆர்யா ராஜேந்திரனின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.