யோகி ஆதித்யநாத்தின் பேச்சு ஆபத்தானது! மம்தா பானர்ஜி விமர்சனம்

யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்வதற்கு 72 மணி நேரமும், மம்தா பானர்ஜி பிரசாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Web Desk | news18
Updated: April 18, 2019, 9:33 PM IST
யோகி ஆதித்யநாத்தின் பேச்சு ஆபத்தானது! மம்தா பானர்ஜி விமர்சனம்
மம்தா பானர்ஜி
Web Desk | news18
Updated: April 18, 2019, 9:33 PM IST
தேர்தல் பிரசாரத்தின்போது, மாயாவதி மனதில் இருந்து பேசினார். ஆனால், யோகி ஆதித்யநாத்தின் கருத்து ஆபத்தானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற மாயாவதி, இஸ்லாமியர்களது வாக்குகள் சிதறாமல் எனக்கு வாக்களிக்கவேண்டும் என்று பேசியிருந்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முஸ்லீம் லீக் ஒரு வைரஸ் என்று பேசியிருந்தார்.

இருவருடைய பேச்சு மதத்தைக் குறிப்பிடும் வகையில் இருந்ததாக தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. மேலும், யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்வதற்கு 72 மணி நேரமும், மம்தா பானர்ஜி பிரசாரம் செய்வதற்கு 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, நியூஸ் 18 தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ராகுல் ஜோஷியிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘தேர்தல் ஆணையம் என்பது நடுநிலையான அமைப்பு. அதனுடைய செயல்பாட்டை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அந்த அமைப்பை நான் மதிக்கிறேன்.

மாயாவதியின் பேச்சு உள்ளத்தில் இருந்துவந்தது. நான், எல்லோரும் எனக்கு வாக்களியுங்கள் என்றுதான் கேட்கிறேன். அதுபோல, மாயாவதி வாக்கு கேட்டுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் பேச்சு இயற்கையாகவே, மிகவும் ஆபத்தானது’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...Also see:

First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...