கடந்த கால முரண்பாடுகளை மறந்து காங்கிரசுக்கு ஆதரவு - மாயாவதி அறிவிப்பு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்று மாயாவதி அறிவிவித்துள்ளார்

Web Desk | news18
Updated: December 12, 2018, 1:26 PM IST
கடந்த கால முரண்பாடுகளை மறந்து காங்கிரசுக்கு ஆதரவு - மாயாவதி அறிவிப்பு
பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி
Web Desk | news18
Updated: December 12, 2018, 1:26 PM IST
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளிக்கும் என அந்த கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

230 உறுப்பினர்களை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு, காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 109 இடங்களையும், பகுஜன் சமாஜ் 2 இடங்களையும், சமாஜ் வாதி கட்சி ஒரு இடத்தையும் சுயேட்சைகள் 4 இடங்களையும் பிடித்துள்ளன. எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மாயாவதி, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்றார். தேவைப்பட்டால் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றார். பட்டியலின மக்களுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவதாக மாயாவதி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார். அதில், பெரும்பான்மை ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல, காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து சுயேட்சைகளும் ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக நேரம் ஒதுக்குமாறு கமல்நாத் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், ஆளுநர் மாளிகையிலிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியான பிறகே, இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see...

First published: December 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...