Home /News /national /

குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தேர்தலில் முர்முவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (Draupadi Murmu) களம்கான்கிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில் முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்.

    64 வயதான முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த பதவிக்கு தேர்வாகும் நாட்டின் முதல் பழங்குடியினப் பெண் ஆவார். மேலும், இதற்கு முன் குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் அனைவரும் 1947க்கும் முன் பிறந்தவர்கள் என்பதால், முர்மு வெற்றி பெரும் பட்சத்தில் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும்.

    முர்முவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என பாஜக சார்பில் தொடர் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதற்காக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் இல்லாத ஒடிசாவின் பீஜு ஜனதாதளம், ஜார்கண்ட் மாநிலத்தின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன. பழங்குடி மக்கள் தொகையை கணிசமாகக் கொண்ட மாநிலங்கள் ஒடிசா மற்றும் ஜார்கண்ட். அத்துடன் ஒடிசா முர்முவின் சொந்த மாநிலமாகும்.

    இந்நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தேர்தலில் முர்முவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளது. இந்த முடிவானது பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுக்கு ஆதரவு என்ற கோணத்திலோ, அல்லது எதிர்க்கட்சிகளுக்கு எதிரானது என்ற கோணத்திலோ எடுக்கப்படவில்லை. நாட்டின் முதன்முதலாக ஆதிவாசி பெண்ணை குடியரசு தலைவராக ஆக்க பகுஜன் சமாஜ் கட்சி பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதையும் படிங்க: Tirupati : விடுமுறை முடிந்தும் குறையாத பக்தர்கள் கூட்டம்.. இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருப்பு!

    அதேபோல், எதிர்க்கட்சிகளும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் எண்ணை ஆலோசிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் மாயாவதி. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னெடுப்பின் பேரில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Draupadi Murmu, Mayawati

    அடுத்த செய்தி