ராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்! கொதித்தெழுந்த மாயாவதி

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ள நிலையில், இதைச் செய்திருப்பது நம்பிக்கையின் மீதான மீறல்.

news18
Updated: September 17, 2019, 6:08 PM IST
ராஜஸ்தானில் காங்கிரஸுக்குத் தாவிய பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள்! கொதித்தெழுந்த மாயாவதி
பகுஜன் சமாஜ்
news18
Updated: September 17, 2019, 6:08 PM IST
பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்களை கட்சிக்குள் இழுப்பது நம்பிக்கையின் மீதான மீறல் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெஹ்லாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

இந்தநிலையில், பகுஜன் சமாஜ் கட்சியச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்கள் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ட்விட்டர் பதிவில், ‘ஆறு பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்களை காங்கிரஸுக்கு இழுத்திருப்பதன் மூலம், அக்கட்சி நேர்மையற்ற கட்சி என்பதை நிரூபித்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ள நிலையில், இதைச் செய்திருப்பது நம்பிக்கையின் மீதான மீறல்.


காங்கிரஸ் அக்கட்சியின் நேரடி எதிரியுடன் மோதுவதற்கு பதிலாக, அவர்களுக்கு உதவிய கட்சிகளை சேதப்படுத்துகிறது. காங்கிரஸ், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர்களுக்கு எதிரான கட்சியாகும். காங்கிரஸ், அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரான கட்சியாக இருந்துள்ளது. அதனால், அம்பேத்கர் சட்டஅமைச்சர் பதவியிலிருந்து விலகினார்’ என்று கடுமையாக சாடினார்.

Also see:

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...