Home /News /national /

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை வேண்டும் - மாயாவதி வேண்டுகோள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை வேண்டும் - மாயாவதி வேண்டுகோள்

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களோடு வேலையின்மையைத் தொடர்புபடுத்திப் பேசியுள்ள சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பாஜக தேர்தல்களிலேயே கவனமாக உள்ளது என்றும் வேலையின்மை பிரச்னையை அது புறந்தள்ளுகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் இந்த விவகாரம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துரைத்துள்ளார். வேலையின்மையில் உழலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க அரசாங்கம் வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    Also see:

    புலம்பெயர் தொழிலாளர்கள் மீது ஊரடங்கு விதிகளை மீறியதற்காகப் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டிருப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெறுமாறு தீர்ப்பளித்திருப்பது காலத்திற்கேற்ற, சரியான, வரவேற்கத்தக்க ஒன்று என்று கூறியுள்ள அவர், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களது மாநிலங்களிலேயே வேலை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் வரவேற்பிற்குரியது; இது குறித்து அரசு தீர்க்கமான முடிவை காலம் தாழ்த்தாமல் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Rizwan
    First published:

    Tags: Bahujan Samaj Party, Mayawati, Migrant workers, Uttar pradesh

    அடுத்த செய்தி