பாஜக-வுக்கு ‘செக்’ வைக்க கைக்கோர்த்த மாயாவதி- அகிலேஷ் யாதவ்

உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணியினர் 38 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 1:27 PM IST
பாஜக-வுக்கு ‘செக்’ வைக்க கைக்கோர்த்த மாயாவதி- அகிலேஷ் யாதவ்
அகிலேஷ்- மாயாவதி கூட்டணி
Web Desk | news18
Updated: January 12, 2019, 1:27 PM IST
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் உத்தரபிரதேசத்தின் எதிரெதிர் துருவங்களான பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணிக்காக கைக்கோர்த்துள்ளன.

மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக-வுக்கு மாற்றாக வலுவான மாற்று அணியாக உருவாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர முயற்சித்து வருகின்றன. இந்த வகையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இதுவரையில் எதிரெதிர் துருவங்களாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.

புதிய கூட்டணியின் அடிப்படையில், உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணியினர் 38 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ள இரண்டு தொகுதிகளை அடுத்ததாகக் கூட்டணியில் இணையவிருக்கும் கட்சிக்குத் தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

கூட்டணியை உறுதி செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “உத்தரபிரேதேசம் பல முறை இந்நாட்டுக்கானப் பிரதமரை அளித்துள்ளது. இந்த வகையில் இம்முறையும் உத்தரபிரதேசத்திலிருந்தே பிரதமர் தேர்வானால் மகிழ்ச்சி” என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி பேசுகையில், “இந்தக் கூட்டணி மக்களவைத் தேர்தலுடன் நிற்காது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் உ.பி. மாநிலப் பொதுத்தேர்தலில் இக்கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.

மேலும் பார்க்க: கூட்டணி அழைப்பு கொடுத்த மோடி!
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...