மக்களவை தேர்தல்: கூட்டணி குறித்து அகிலேஷ், மாயாவதி இன்று அறிவிப்பு

ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Web Desk | news18
Updated: January 12, 2019, 8:52 AM IST
மக்களவை தேர்தல்: கூட்டணி குறித்து அகிலேஷ், மாயாவதி இன்று அறிவிப்பு
அகிலேஷ் யாதவ்
Web Desk | news18
Updated: January 12, 2019, 8:52 AM IST
மக்களவை தேர்தலுக்காக உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைக்கும் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிடுகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும், புதிருமாக உள்ள சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும், மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. பாஜக-வின் ஆதிக்கத்தை முறியடிக்க அவர்கள் கைகோர்த்துள்ளன. கூட்டணி குறித்து டெல்லியில் கடந்த வாரம் அகிலேஷும், மாயாவதியும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, காங்கிரஸ் அல்லாமல் 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், லக்னோவில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இன்று மதியம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுகின்றனர். உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் தலா 37 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

Mayawati, BSP, மாயாவதி
பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி


இதில் மீதமுள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. கூட்டணியில் காங்கிரஸை சேர்க்கவில்லை என்றாலும் சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுலின் அமேதி தொகுதிகளில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என அகிலேஷ் யாதவும், மாயாவதியும் முடிவு செய்துள்ளனர்.

Also see... திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடையில் வருமானவரி சோதனை
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...