மூழ்கும் கப்பலில் ஒரு அங்கமாக இருக்கிறார் மாயாவதி... - பிரதமர் மோடி விமர்சனம்

'மூழ்கும் கப்பலில் ஒரு அங்கமாக மாயாவதி இருக்கிறார். இந்த மதச்சார்பற்ற அணி குறித்துத்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது’.

மூழ்கும் கப்பலில் ஒரு அங்கமாக இருக்கிறார் மாயாவதி... - பிரதமர் மோடி விமர்சனம்
மோடி
  • News18
  • Last Updated: April 9, 2019, 7:23 PM IST
  • Share this:
‘மாயாவதி தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு மூழ்கும் கப்பல்’ என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கான பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “முஸ்லிம்களின் ஆதரவு வாக்குகளாக மஹாகத்பந்தன் கூட்டணிக்கே வேண்டும் எனப் பேசியுள்ளார். தோல்வியை நோக்கிச் செல்லும் மாயாவதி இதுபோல் பேசுவது இயற்கையே. அவருக்கு மட்டும்தான் முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என முறையிடுகிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் கவனம் செலுத்த வேண்டும்.

மூழ்கும் கப்பலில் ஒரு அங்கமாக மாயாவதி இருக்கிறார். இந்த மதச்சார்பற்ற அணி குறித்துத்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. இப்போதெல்லாம் இவர்கள் பேசமாட்டார்களா? இதுவே ஹிந்துக்கள் மத்தியில் யாராவது பேசியிருந்தால் கொந்தளித்திருப்பார்கள். கூடுதலாகக் கையெழுத்து இயக்கம் எல்லாம் நடத்தியிருப்பார்கள்.


ஆனால், மதச்சார்பற்ற குழுக்கள் மாயாவதி விவகாரத்தில் தலையிடாதது ஏன்? இது நாட்டின் கவலைக்குரிய விவகாரம் ஆகும். இதுபோன்ற விவகாரங்களை வெளிக்கொண்டு வாருங்கள். இதுபோன்ற செயல்கள் மதச்சார்பின்மையைப் பாதிக்காதா? மதச்சார்பின்மை என்ற முகமூடியின் பின்னால் இவர் போன்றவர்கள் மறைந்திருப்பதுதான் நாட்டின் பெரும் பிரச்னை. அரசியலில் பிழைக்கக் காரணம் தேடிக்கொண்டிருக்கிறார் மாயாவதி. இதேபோல், எப்படியாவது வாக்கு சேகரிக்கவும் திட்டமிடுவார்” என்றார். 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்