இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்றும் வரும் 7-ஆம் தேதிக்குப் பின் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 125 ரூபாய் வரை அதிகரிக்கும் எனக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
கச்சா எண்ணெயின் விலை எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறதோ, அதே வேகத்தில் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றினால், உற்பத்தி விலையில் ஆறு ரூபாய் வரை மட்டுமே அதிகரித்தாலும், அதன் மீதான வரிகள் காரணமாகவே விலை மேலும் அதிகமாகும் நிலை உள்ளது.
நீட் தேர்வால் எத்தனை மாணவர்கள் உயிரிழக்க வேண்டும் - கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு குரல்
கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும், மீண்டும் பெட்ரோல் விலை பெரிய அளவில் குறையாது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.