Home /News /national /

இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவில் சிஸ்டம் சரியில்லை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நிதின் கட்கரி

நிதின் கட்கரி

அரசு அமைப்பில், முடிவுகளை எடுக்காமல் இருப்பது மற்றும் முடிவெடுப்பதில் தாமதம் செய்வது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பேசினார்.

    இந்தியாவில் உள்ள அமைப்பு (System) காரணமாக  பெரும்பாலான திட்டங்கள் தாமதமாகின்றன என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    கட்டுமானம் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான SCL India 2021 conference  கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அப்போது அவர், நான் யார் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் கூற விரும்பவில்லை, ஆனால் அதிகபட்ச திட்டங்கள்  அமைப்பு சரியில்லாததன்  காரணமாக தாமதமாகின்றன.

    அரசு அமைப்பில், முடிவுகளை எடுக்காமல் இருப்பது மற்றும் முடிவெடுப்பதில் தாமதம் செய்வது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. முடிவுகளை எடுப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுவதால் திட்டங்களுக்கான செலவும் அதிகரிக்க வழிவகுக்கிறது என்று நிதின் கட்கரி கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறைகளில் ஒன்று கட்டுமானம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கட்டுமானத் துறை உள்ளது. பிரதமர் எனது தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பிரச்சினையை தீர்க்க நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: வாழ்நாள் இலவச பேருந்து சேவையை வழங்கிய தெலுங்கானா போக்குவரத்து கழகம்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Nitin Gadkari

    அடுத்த செய்தி