• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவின் மிகப்பெரிய மதமாற்ற கும்பலின் பின்னணியில் இருந்த மவுலானா கலீம் சித்திகி கைது!

இந்தியாவின் மிகப்பெரிய மதமாற்ற கும்பலின் பின்னணியில் இருந்த மவுலானா கலீம் சித்திகி கைது!

Maulana-Kaleem-Siddiqui

Maulana-Kaleem-Siddiqui

மவுலானாவின் தலைமையிலான அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் வந்துள்ளது,

  • Share this:
இந்தியாவின் மிகப்பெரிய மதமாற்ற குழுவின் செயல்பாட்டை கண்டறிந்த தீவிரவாத எதிர்ப்புப் படையினர், மவுலானா கலீம் சித்திகி என்பவரை கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் முசாஃபர்நகரில், இந்தியாவின் மிகப்பெரிய மதமாற்ற குழுவின் செயல்பாட்டை கண்டுபிடித்தனர், இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த மவுலானா கலீம் சித்திகி என்பவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

மவுலானா கலீம் சித்திகி வடக்கு உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மத தலைவராக பார்க்கப்படுபவர், இவர் நடத்தி வந்த ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இந்த அறக்கட்டளை பல மதராசாக்களுக்கு பணம் அனுப்பியுள்ளதும் கண்டறியப்பட்டது.

உத்தரப்பிரதேச சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய மதமாற்ற கும்பலின் செயல்பாட்டை கண்டறிந்தோம். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், வாய்பேச முடியாத, காது கேளாதவர்கள் மற்றும் சிறுவர்களை கட்டாயமாக மதம் மாற்றி வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Also Read:  ஒன் பிளஸ் நார்ட் 2 5ஜி ஸ்மார்ட் போன் வெடித்து தீப்பிடித்ததாக புகார் கூறிய வழக்கறிஞருக்கு நோட்டீஸ்!

மவுலானாவின் தலைமையிலான அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் வந்துள்ளது, இதில் ஒன்றரை கோடி ரூபாய் பக்ரைன் நாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த முறைகேடுகளை விசாரிப்பதற்காக தீவிரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்த 6 குடுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது என ஏடிஜிபி பிரசாந்த் கூறினார்.

64 வயதாகும் மவுலானாவின் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து கண்காணித்து வந்தோம், நேற்றிரவு மீரட் வந்த மவுலானாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Also Read:   சென்னை வரும் சொகுசு சுற்றுலா கப்பல்.. சிறப்புகள் என்ன?

டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தின் மையப் புள்ளியாக கருதப்படும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவான அமனதுல்லா கான், மவுலானா கலீம் சித்தகியின் கைது குறித்து கூறுகையில், உத்தர்ப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரபலமான இஸ்லாமிய அறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனம் அதிகரித்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் இது போன்ற விவகாரங்களில் அமைதியாக இருப்பது பாஜகவை மேலும் பலப்படுத்துவதாக உள்ளது. தேர்தல் வெற்றிக்காக இன்னும் எவ்வளவு கீழிறங்கப்போகிறது பாஜக?” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: