• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பயனாளர்களின் தகவல் அழிப்பு விவகாரம்: என்ன சொல்கிறது மாஸ்டர் கார்டு நிறுவனம்!

பயனாளர்களின் தகவல் அழிப்பு விவகாரம்: என்ன சொல்கிறது மாஸ்டர் கார்டு நிறுவனம்!

மாஸ்டர் கார்

மாஸ்டர் கார்

மாஸ்டர் கார்டு நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவருகிறது. ஆனால், எந்த நாட்டிலும் பயனாளர்களின் தகவல்களை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை என்று மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பயனாளர்களின் சுயவிவரங்களை அழிப்பது குறித்த திட்டத்தை மாஸ்டர் கார்டு நிறுவனம்(Master card) ரிசர்வ் வங்கியிடம் அளித்துள்ளது.

    மாஸ்டர் கார்டு போன்ற நிதிச் சேவை வழங்கும் நிறுவனர்கள் அதனுடைய பயனார்கள் குறித்த விவரங்களை இந்தியாவில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, ஏப்ரல் மாதம் புதிய விதிகளைக் கொண்டுவந்தது. அந்த விதி, அக்டோபர் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

    இந்த விவகாரம் குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தெற்கு ஆசியாவின் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைவர் போருஸ் சிங், ‘மாஸ்டர் கார்டு நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவருகிறது. ஆனால், எந்த நாட்டிலும் பயனாளர்களின் தகவல்களை அழிக்க வேண்டும் என்று கூறவில்லை. அக்டோபர் 6-ம் தேதிக்கு பிறகு இணைந்த பயனாளர்களின் தகவல்கள் அனைத்தும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி புனேவிலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் சேமிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பயனாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டு எண்கள், பரிவர்த்தனை விவரங்களை அழிப்பது குறித்த செயல்திட்டத்தை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியுள்ளோம்.

    அந்த விவரங்கள் இந்தியாவில் மட்டும் சேமிக்கப்படும். இந்தியர்கள் குறித்த விவரங்கள் இந்தியாவில் மட்டும் சேமிக்கப்படுகிறது. ஆனால், தகவல்களை அழிப்பது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும். உலகிலுள்ள வேறு எந்த நாடுகளும் குளோபல் சர்வரிலுள்ள(global server) தகவல்களை அழிக்க வேண்டும் என்று கூறியதில்லை. அதனால், சர்வரிலிருந்து தகவல்களை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பாதுகாப்பு அம்சங்கள் குறைவது குறித்தும் தெரிவித்துள்ளோம். தகவல்களை அழிப்பது என்பது எளிதான காரியம் இல்லை. அது மிகப் பெரிய நடைமுறைகளைக் கொண்டது’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: