Home /News /national /

ராஜஸ்தான் எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் எண்ணெய் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் முழுவதும் பரவியது.

    ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்ப 4 பேர் உயிரிழந்தனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜாம்வா ராம்கரில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த சிஓ சிவகுமார், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் முழுவதும் பரவியது.

    மேலும் படிக்க...  ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!

    இதுகுறித்து ஜாம்வா ராம்கர் வட்ட அதிகாரி ஷிவ்குமார் பரத்வாஜ் கூறியதாவது, பெயிண்ட் செய்ய பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ​​தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Fire accident

    அடுத்த செய்தி