மின்கசிவால் பயங்கர தீ விபத்து! தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்கள்

தீ விபத்தில் மூன்று மாடி கட்டிட சுவர்கள் வெப்பம் தாங்காமல் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தன.

தீ விபத்தில் மூன்று மாடி கட்டிட சுவர்கள் வெப்பம் தாங்காமல் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

காக்கிநாடாவில் உள்ள மியான் வீதியில் செயல்பட்டு வரும் தனியார் பல்பொருள் அங்காடியில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென பரவிய தீ விபத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்த பொருட்களும் எரிந்து சாம்பலாகின.

சம்பவ இடத்திற்கு 8 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், 4 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் மூன்று மாடி கட்டிட சுவர்கள் வெப்பம் தாங்காமல் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தன.

இவ்விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Also watch: தாய் மொழியில் மட்டுமே விருது பட்டயம் வழங்கவேண்டும்: விருது பெற்ற யூசப் கோரிக்கை!

Published by:Anand Kumar
First published: