மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி: பிரதமர்

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதை உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பாஜகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Web Desk | news18
Updated: May 2, 2019, 12:29 PM IST
மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி: பிரதமர்
மசூத் அசார்
Web Desk | news18
Updated: May 2, 2019, 12:29 PM IST
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்ததை தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி கடந்த 2009-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இந்தியா சார்பில் ஐ.நா சபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

சீனா போட்ட முட்டுக்கட்டை:


இதற்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டது. பின்னர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மசூத் அசாருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியா மீண்டும் தீர்மானத்தை கொண்டு வந்தது.

அதற்கு அடுத்து 2017-ம் ஆண்டு மசூத் அசார் மீது அமெரிக்கா மீண்டும் தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்திற்கும் சீனா முட்டுக்கட்டை போட்டதால் மசூத் அசார் விவகாரத்தில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவிப்பு

Loading...

காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலை அடுத்து மசூத் அசார் மீது கடந்த மார்ச் 13-ம் தேதி மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு சீனா ஆதரவு தெரிவிக்காததுடன், அசார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து உறுப்பு நாடுகளிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறியது.

இதையடுத்து, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் தொடர் அழுத்தம் காரணமாக மசூத் அசார் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு சீனா ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து ஐ.நா அவையில் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை ஐ.நாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் உறுதிபடுத்தியுள்ளார்.

ஐ.நா அறிவிப்பிற்கு பிரதமர் மோடி வரவேற்பு

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா சபை அறிவித்திருப்பது தீவிரவாதத்திற்கு எதிரான போரில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், இந்தியா மீது மறைமுகமாக தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக பாஜக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் ஒரு பகுதியே இது என்றும் மோடி கூறினார்.

இதேபோன்று மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கான வெற்றியா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்தவர், இந்த மசூத் அசார் மீதான தடைக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பாஜகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசல் உறுதியளித்துள்ளார்.

மசூத் அசார் மீதான தடையை செயல்படுத்த நடவடிக்கை

பயணங்கள் செய்வதற்கு தடை, சொத்துக்களை முடக்கி வைப்பது, ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை என மூன்று நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும். பாகிஸ்தான் தான் இதற்கு பொறுப்பானது. மேலும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாகிஸ்தானில் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த மசூத் அசார், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து வந்த நிலையில், தற்போது அவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Also see... மசூத் அசார் யார்? ஏன் அவர் சர்வதேச தீவிரவாதி...? 

தண்ணீர் பஞ்சத்தின் மற்றொரு கோர முகம்... தண்ணீர் கேட்டதால் தாக்கப்பட்ட பெண்...! 

Also see... எப்படி நடந்தது புல்வாமா தாக்குதல்?


Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...