ஹோம் /நியூஸ் /இந்தியா /

மீண்டும் மாஸ்க் கட்டாயம்.. மீறினால் ரூ.500 அபராதம்.. டெல்லியில் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்...

மீண்டும் மாஸ்க் கட்டாயம்.. மீறினால் ரூ.500 அபராதம்.. டெல்லியில் அமலுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள்...

மீண்டும் மாஸ்க் கட்டாயம்.. மீறினால் ரூ.500 அபராதம்..

மீண்டும் மாஸ்க் கட்டாயம்.. மீறினால் ரூ.500 அபராதம்..

Masks mandatory: டெல்லியில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல அலைகளை உருவாக்கியது. இந்தியாவில் கொரோனா முதல் அலைக்குபின் டெல்டா வைரஸின் இரண்டாவது அலை உருவானது. டெல்டா வைரஸ் தான் இந்தியாவில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

  அதன்பின் ஒமைக்ரான் இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தியது. ஒமைக்ரான் அதிகம் பரவினாலும் இதனால் உயிரிழப்பு என்பது குறைவாகவே இருந்தது. இதனால் ஒமைக்ரான் மார்ச் மாதத்தில் குறைந்து வந்தது.

  இந்நிலையில், டெல்லியில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

  இதையும் படிங்க - 2024 தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற காங்கிரஸ் இலக்கு... வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

  இதில் கொரோனா பேரிடர் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற விதிமுறையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

  கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் வகுப்புகளைத் தொடர அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Corona, Covid-19, Delhi, Mask