ஹோம் /நியூஸ் /இந்தியா /

’50 லட்சம் ரூபாய் எடு...’ - கடை ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் மிரட்டல்! - டெல்லியில் பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்!

’50 லட்சம் ரூபாய் எடு...’ - கடை ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் மிரட்டல்! - டெல்லியில் பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்!

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

டெல்லியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

    டெல்லியில் பாவனா பகுதியில் உள்ள கடையில் பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், துப்பாக்கி சூடு நடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்கப்பட்ட கடையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான அந்த காட்சிகளில், இரு சக்கர வாகனத்தில் இருவர் வருவதும் அதில் ஒருவன் மட்டும் கடையின் வெளியில் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டு விட்டு, மீண்டும் துப்பாக்கியில் குண்டு போட்டு மறுமுறை சுடுவதும் பதிவாகியுள்ளது.

    கடைக்காரரிடமிருந்து பணம் பறிப்பதற்காக இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகத்தில் கர்ஷிப் கட்டிக்கொண்டு வந்த அந்த கொள்ளையர்கள் கடை உரிமையாளரிடம் 50 லட்சம் பணம் கேட்டு மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களைத் தேடும் பணியில் டெல்லி காவல்துறை ஈடுப்பட்டு வருகின்றனர்.

    Published by:Janvi
    First published:

    Tags: Delhi, Gun fire