இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறையத் தொடங்கிய பின்னர் முகக்கவசம் (Mask) அணிவோரின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், முகக்கவசம், தடுப்பூசி இரண்டுமே அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. தடுப்பூசிகள் செலுத்துவதும் துரிதப்படுத்தப்பட்டது. முகக்கவசம் அணிவது, சானிட்டைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பழக்கங்களை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க தொடங்கினர்.
கொரோனா 2வது அலை பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து முகக் கவசம் அணிவது, சமுக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பழக்கங்கள் குறையத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 25க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது.
இத்தகைய சூழலில் முகக்கவசம் அணிவது குறைந்துள்ளதற்கு மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், முகக் கவசம் பயன்பாடு குறைவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவில் ஒமைக்ரான் பரவலின் நிலை கவலை அடைய செய்கிறது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்... 17 பேருக்கு தொற்று உறுதி
பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, தற்போது நாம் ஆபத்தான மற்றும் ஏற்றுக்கொள்ளாத முறையில் செயல்பட்டுகொண்டிருக்கிறோம். இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு என்பது 2வது அலைக்கு முந்தைய காலக்கட்டதற்கு சமமான அளவு குறைந்துள்ளது. முகக்கவசம், தடுப்பூசி இரண்டுமே முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச சூழல்களை பார்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் படிங்க: டான்சானியாவிலிருந்து திரும்பிய சென்னையை பூர்வீகமாக கொண்டவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.