காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மேரிகோம் வரவேற்பு!

"விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான வசதிகள் கிடைக்கும்"

Web Desk | news18
Updated: August 22, 2019, 2:36 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மேரிகோம் வரவேற்பு!
மேரி கோம்
Web Desk | news18
Updated: August 22, 2019, 2:36 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மாநிலங்களவை எம்.பி.யும், குத்துச்சண்டை வீராங்கனையுமான மேரிகோம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இல்லாத நிலையில் அந்த அதிகாரம் நாடாளுமன்றத்தின் கீழ் வருகிறது என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலைப் பெற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பும் வரவேற்பும் வந்த வண்ணம் உள்ள நிலையில், மாநிலங்களவை எம்.பி.யும், குத்துச்சண்டை வீராங்கனையுமான மேரிகோம் வரவேற்று பேசியுள்ளார்.


அதில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு இனி மத்திய அரசால் சிறப்பான வசதிகளை செய்து தர முடியும் எனக் கூறியுள்ள அவர், அதன் மூலம் அவர்களால் நாட்டிற்காக சிறப்பாக விளையாட முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமையை நிரூபித்த விளையாட்டு வீரர்களை உள்நாட்டில் தகுதி சுற்றில் பங்கேற்குமாறு வற்புறுத்தக் கூடாது என மேரி கோம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பார்க்க... எங்க ஊரு மெட்ராசு... இது நம்ம சென்னை...!

Loading...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...