வன்கொடுமை செய்த பெண்ணை மணந்துகொள்ள தயாரா? - உச்சநீதிமன்றம் கேட்ட கேள்வியை திரும்பப்பெறுமாறு சி.பி.எம் தலைவர் கடிதம்..

பிருந்தா காரத்

‘‘அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள நீங்கள் தயாரா? அதற்கு தயார் என்றால், மனுவை பரிசீலிக்கிறோம். இல்லாவிட்டால், நீங்கள் ஜெயிலுக்கு போக வேண்டியதாக இருக்கும்’’ என்று கூறியுள்ளது.

  • Share this:
    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்பப்பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பிருந்தா கரத் கடிதம் எழுதியுள்ளார்.




    மஹாராஷ்ட்ர மாநிலத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரின் முன்ஜாமீன் மனு, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து, ‘‘அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள நீங்கள் தயாரா? அதற்கு தயார் என்றால், மனுவை பரிசீலிக்கிறோம். இல்லாவிட்டால், நீங்கள் ஜெயிலுக்கு போக வேண்டியதாக இருக்கும்’’ என்று கூறியுள்ளது.




    இந்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமை நீதிபதி போப்டேவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ தலைவர் பிருந்தா கரத் நேற்று ஒரு கடிதம் எழுதினார்.


    இதுபோன்ற கேள்விகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை உணர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால், ஜெயிலுக்கு போகாமல் தப்பித்து விடலாம் என்ற சிந்தனையை உருவாக்கி விடும். இத்தகைய கருத்துகள், வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து விடும். ஆகவே, உங்கள் கருத்துகளை வாபஸ்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்



    Published by:Gunavathy
    First published: