பசுமை வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு Maruti Suzuki தலைவர் வரவேற்பு..

Maruti Suzuki Chairman R C Bhargava. (Image Source: Reuters)

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு மாருதி சுசூகி சேர்மன் ஆர்.சி.பார்கவா (RC BHARGAVA) வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  • Share this:
சுற்றுச்சூழலை பாதிக்கும் பழைய வாகனங்களின் தகுதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் அல்லது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பது இந்திய ஆட்டோ மொபைல் துறையின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பழைய வாகனங்களுக்கு பசுமை வரி (GREEN TAX) விதிக்கும் முடிவுக்கு மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டம் குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை பெறப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

அதன்படி, பழைய வாகனங்களுக்கான வாகன விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மாறவுள்ளது. 8 ஆண்டுகள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படும்போது, சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் ஒரே வாகனத்தை பயன்படுத்தி வந்தால், நிச்சயம் அவர் பசுமை வரி செலுத்த வேண்டியிருக்கும். டெல்லி போன்ற அதிகம் மாசு நிறைந்த நகரங்களில் வசிப்பவர்கள் பயன்படுத்தும் பழைய வாகனங்களுக்கு 50 விழுக்காடு வரை பசுமை வரி விதிக்கப்பட, புதிய சட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பசுமை வரி விதிகக்கபடும் என்றும், எல்பிஜி, சிஎன்ஜி, மின்சார வாகனங்களுக்கு இந்த பசுமை வரி கிடையாது என மத்திய அரசு விளக்கியுள்ளது. 

வர்த்தக ரீதியான கார்களுக்கு  ஆண்டு சாலை கட்டணமாக 1600 முதல் 3600 ரூபாய்  வரை செலுத்த வேண்டியிருக்கும். இதில் 10 - 25% பசுமை வரியாக வருடத்திற்கு 160 முதல் 900 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும். மத்திய அரசின் முடிவுக்கு இந்திய ஆட்டோமொபைல் துறையின் முன்னோடிகளில் ஒருவரான மாருதி சுசூகி சேர்மன் ஆர்.சி.பார்கவா (RC BHARGAVA) வரவேற்பு தெரிவித்துள்ளார். சரியான மற்றும் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் தொலைநோக்கான திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார். 

மேலும், வாகனத்தின் தகுதிச் சான்றிதழ்கள் பிழையில்லாமல் வாகனத்தின் வின்ட்ஷீட்டில் காட்டப்படவேண்டும்  எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் வாகன உற்பத்தி 1.5 விழுக்காடு அளவுக்கு சரிந்திருப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அதனை மீட்கவும், நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலான ஒரு உந்துதல் தேவைப்படுவதாகவும் பார்கவா கூறியுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: