Home /News /national /

வேலையில் இருப்பவரை கல்யாணம் செஞ்சிக்கோ... விரக்தியில் மனைவிக்கு மேசேஜ் அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

வேலையில் இருப்பவரை கல்யாணம் செஞ்சிக்கோ... விரக்தியில் மனைவிக்கு மேசேஜ் அனுப்பிவிட்டு கணவர் தற்கொலை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வீட்டில் தனியாக இருந்த  சதிஷ் பிஜ்ஹடே, வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.  தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவர் தனது மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

    மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் தனது மனைவிக்கு வேலைக்கு செல்பவரை திருமணம் செய்துகொள்ளுபடி குறுந்தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த சதிஷ் பிஜ்ஹடே என்ற நபர் ஹர்தா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு சமோடா தில்வாரி என்பவருடன் கடந்த 2020ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடைபெற்றது. பி.டெக் பட்டதாரியான சதிஷ் வேலை கிடைக்காமல் இருந்துள்ளார்.  அதேவேளையில், அவரது மனைவி வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், வேலை கிடைக்காததால் சதிஷ் விரக்தியில் இருந்து வந்துள்ளார். மேலும்,  இதன் காரணமாக தம்பதி இருவருக்கும் இடையே சண்டை சச்சரவும் இருந்துவந்துள்ளது. இதனால், அவர்கள் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    இந்நிலையில், ஏப்ரல் 16ம் தேதி சமோடா தில்வாரி, தனது பணிக்காக ரஹத்கான் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த  சதிஷ் பிஜ்ஹடே, வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.  தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவர் தனது மனைவிக்கு குறுஞ்செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொல்ல முயற்சி.. பிஹெச்டி மாணவி கைது


    இதனை அடுத்த நாள் காலையில்தான் சமோடா படித்துள்ளார். அதில், நான் போகிறேன். நீ நல்லா இரு, வேலை இருக்கிற வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கோ’ என்று குறிப்பிட்டுள்ளார். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு சமோடா தகவல் அனுப்பியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். அதனுடன் இரண்டு பக்க அளவுக்கு தற்கொலை குறிப்பும் இருந்துள்ளது. அதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவி மையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madhya pradesh, Suicide

    அடுத்த செய்தி